குழந்தை ஏக்கம்: ரூரேகேலா என்ஐடி தமிழக பேராசிரியர், மனைவியுடன் தற்கொலை!

புவனேஸ்வர்:

குழந்தை இல்லாத ஏக்கத்தில் ரூர்கேலா என்ஐடியில் பணியாற்றி  வந்த  தமிழக பேராசிரியர், மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். தங்களுக்குக் குழந்தை இல்லாததால் மன விரக்தியில் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று தம்பதி கடிதம் எழுதி வைத்துள்ளனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசாவின் என்ஐடி கல்வி நிறுவனத்தில் அறிவியல் துறையில்  பணி செய்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த  துணை பேராசிரியர், தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். ஒடிசாவின் ரூர்கெலாவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட துணைபேராசிரியர் ராசு ஜெயபாலன் (வயது 37) என்பதும், அவரது மனைவி பெயர் மாலினி (வயது 35) என்பதும் தெரிய வந்துள்ளது.  அவர்கள் வீட்டை சோதனை யிட்ட காவல்துறையினர் அங்கிருந்து, கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.

அந்த கடிதம், அவர்கள் தற்கொலை முடிவு எடுக்கும் முன்பு எழுத்தியிருப்பதாகவும், அதில், தங்களுக்குக் குழந்தை இல்லாததால் மன விரக்தியில் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று எழுதி இருப்பதாகவும்  ரூர்கெலா எஸ்.பி சர்தாக் சாரங்கி தகவல் தெரிவித்துள்ளார்.