மேற்குவங்க பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய நிலையில் உடல் மீட்பு… கொலையா?

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத் ராய் வீட்டிற்கு வெளியே தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார். இந்த சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்காளத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தை  சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ தேபேந்திர நாத் ராய்.  இன்று காலை அவரது வீட்டிற்கு வெளியே தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.  அவரது கால் தலையில் பட்டவாறு உடல் தூக்கில் தொங்கியதால், அவரது இறப்பு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

தேபேந்திர நாத் ராய் கொலை செய்த பின்னரே தூக்கில் தொடங்கவிடப்பட்டுள்ளதாக பாஜகவினரும், அவரது  குடும்ப உறுப்பினர்களும்  குற்றம் சாட்டியுள்ளனர்.  இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், எம்எல்ஏவின் உடலை  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

காவல்துறையினரின் விசாரணையில், எம்எல்ஏக்கும் அவருடன் தொடர்பில் இருந்த 2 பேருக்கும் இடையே நடைபெற்ற பணம் கொடுக்கல் வாங்கலில் இந்த கொலை செய்யப்பட்டிருப்பதாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணையின் முடிவில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டாரா, கொலை செய்யப்பட்டாரா எனப்து தெரிய வரும் என்று காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.ரிய வந்துள்ளது.