தற்கொலை மாணவிகள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம்!! முதல்வர் அறிவிப்பு

சென்னை:

வேலூர் பனப்பாக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட 4 பள்ளி மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே பனப்பாக்கம் அரசு பள்ளியில் படித்து வந்த 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். 11-ம் வகுப்பு மாணவிகளான அவர்கள் ரேவதி, சங்கரி, தீபா, மணிஷா என தெரிய வந்தது.

பெற்றோரை அழைத்து வரும்படி ஆசிரியர் கூறியதற்கு மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மாணவிகளின் குடும்பத்திற்கு தனது இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.