சுஜித் இறப்புக்கு அவரது பெற்றோரே காரணம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

விருதுநகா்: சிறுவன் சுஜித் இறப்புக்கு அவரது பெற்றோரே காரணம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்கும். இடைத் தேர்தல் வெற்றி தான், உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணிக்கு கிடைகும். அந்த தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறோம்.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை சில எம்எல்ஏக்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அதுபோன்று எந்த ஒரு தனி விருப்பமும் கட்சியில் கிடையாது. தலைமையின் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடப்பதே முறை.

சிறுவன் சுஜித் மரணம் பொது இடத்தில் நிகழ்ந்த விபத்து கிடையாது. பெற்றோர் கவனக்குறைவே அதற்கு காரணம்.  ஆகையால், இந்த விவகாரத்தில் ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகள் அபத்தமானது என்றார்.