குரோஷுயா அணியின் தலைவருக்கு நன்றி தெரிவித்த அர்ஜெண்டினா ரசிகர்கள்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஐஸ்லாந்தை தோற்கடித்ததற்கு அர்ஜெண்டினா ரசிகர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டதாக குரோஷியா கால்பந்து அணியின் தலைவரும், முன்னாள் வீரருமான சுகர் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால்பந்து போட்டியில் குரோஷியா மற்றும் ஐஸ்லாந்து அணிகள் மோதின. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை குரோஷியா வென்றது. இந்த வெற்றியை தொடர்ந்து குரொஷியாவின் தாவோர் சுகருக்கு பலர் நன்றி தெரிவித்தனர். இந்த தோல்வியை தொடர்ந்து உலக கோப்பை போட்டியில் இருந்து ஐஸ்லாந்து அணி வெளியேறியது.
davor-šuker
குரோஷியாவின் இந்த வெற்றி அர்ஜெண்டினாவிற்கு சாதகமாக அமைந்தது. புதன்கிழமை நைஜீரியாவை எதிர்கொண்ட அர்ஜெண்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது. இதனால் அது காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. அர்ஜெண்டினாவின் இந்த வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள் சுகர்க்கு நன்றியை தெரிவித்து கொண்டனர். குரோஷியா கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான தாவோர் சுகர் 69 தேசிய போட்டிகளில் 45 முறை வெற்றிப்பெற்றுள்ளார்.

இது குறித்து சுகர் கூறுகையில், “ உருகுவே மற்றும் எங்கள் அணி 9 புள்ளிகளை பெற்றிருந்த போது நாங்கள் புள்ளிகளை கணக்கிடவில்லை. எங்களின் வெற்றியை நோக்கி முயற்சித்தோம். ஐஸ்லாந்தை தோற்கடித்த பிறகு நன்றி தெரிவித்து எனக்கு நிறைய செய்திகள் வந்தன. அதில் பெரும்பாலும் அர்ஜெண்டினாவை சேர்ந்தவர்களாக இருந்தது குறிப்பிடடதக்கது. யாருடைய பெயரையும் நான் குறிப்பிட விரும்பவில்லை. அர்ஜெண்டினாவை சேர்ந்தவர்கள் என்னை தொடர்பு கொண்டு நன்றி கூறினர். அவர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்~ என்று தெரிவித்தார். மேலும் வரும் ஜாயிற்றுக்கிழமை டென்மார்க் உடன் நடைபெறும் போட்டியில் பங்கேற்க வீரர்கள் தயாராக உள்ளதாக சுகர் தெரிவித்தார்.

3 லட்சம் மக்கள் தொகையை கொண்ட ஐஸ்லாந்து முதல் முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்றது. நாக் அவுட் சுற்றில் ஒருபோட்டியில் டிராவும், இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால் ஐஸ்லாந்து உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது.