ஆள்மாறாட்டம் வழக்கு: சிபிஐ வளையத்திற்குள் ‘இரட்டை இலை’ சுகேஷ்சந்திராவுடன் தமிழக எம்எல்ஏவின் மனைவி….

சென்னை: ஆள்மாறாட்டம் வழக்கு தொடர்பாக,  சிபிஐ வளையத்திற்குள் ‘இரட்டை இலை’ சுகேஷ்சந்திராவுடன் தமிழக எம்எல்ஏவின் மனைவி ஒருவரும் சிக்கி உள்ளதாகவும், அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா மறைவைத்தொடர்ந்து, அதிமுக உடைந்தால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இது தொடர்பாக, கடந்த 2017ம் ஆண்டு  தேர்தல்ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, இரட்டை இலையை மீட்க பேரம் பேசியதாக தொடர்பாக டிடிவி தினகரன், தரகர் சுகேஷ் சந்திரா உள்படபலர் கைது செய்யப்பட்டனர்.   இந்த வழக்கில்,  சுகேஷ் சந்திரா, பரோல் மற்றும் இடைக்கால ஜாமீனில் டெல்லி சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து வருகிறார். தற்போது உச்சநீதிமன்றம் சுகேஷ் சந்திராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுயுள்ளது.

இந்த நிலையில், ஒரு எம்.பி.யின் ஐடியை காண்டிபித்து,  மோசடி செய்ததாகவும், தனது காரில்  நாடாளுமன்ற உறுப்பினரின் ஸ்டிக்கரை ஒட்டி பயன்படுத்தியதாகவும், பல்வேறு முறைகேடான செயல்களில் ஈடுபட்டதாகவும்,  முன்னாள் சட்ட மந்திரி மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி போல ஆள்மாறாட்டம் செய்ததாகவும் புகார்கள் உள்ளன. மேலும்,  சென்னை, பெங்களூரு மற்றும் டெல்லி உட்பட நாடு முழுவதும் பல மோசடி வழக்குகளிலும் அவர் சிக்கி உள்ளதாகவும் அவர்மீது ஏராளமான புகார்கள் இருப்பதாக சிபிஐ தெரிவித்து உள்ளது.

தற்போது நீட்டிக்கப்பட்ட ஜாமின் காரணமாக சென்னையில்  தங்கி உள்ள சுகேஷ் சந்திரசேகரா, ஈ.சி.ஆர் பகுதியில்  ஒரு பங்களாவில் முகாமிட்டு உள்ளது, அங்கு அவரை,  டிடிவி தினகரன் மனைவி மற்றும்,  சுகேஷ் சந்திராவின்  கூட்டாளியான  நடிகை லீனா மரியா பால்,  சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது,லீனா மரியபால்,   மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு பணத்தை திரட்டுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கேரள மாநிலத்தை சேர்ந்த நடிகை லீனா மரியா பால்.  இவர்மீது,   சென்னையில் கனரா வங்கியில் காதலனை ஐஏஎஸ் அதிகாரி என்று காட்டி நடித்து ரூ.19 கோடி மோசடி செய்தது மற்றும் தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.76 லட்சம் மோசடி செய்த வழக்குகளில் கைது செய்யப்பட்டவர். தறபோது அவர்மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் ஜாமினில் உள்ளார்.

இந்த நிலையில், அவரும்,  அவரது கூட்டாளியும் ஈ.சி.ஆருக்கு வெளியே ஒரு பங்களாவில் தங்கியிருப்பதுடன், ஒரு மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான பணம் திரட்டும் வகையில் சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘

வங்கி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள்   பாராளுமன்ற உறுப்பினர் ராயபதி சம்பாசிவராவிடம் இருந்து. சிபிஐ அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்ததற்காக இரண்டு பேர் ஜனவரி மாதம்  கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஐதராபாத்தில் வசிக்கும் ஒய்.மணிவர்தன் ரெட்டி மற்றும் மதுராவைச் சேர்ந்த செல்வம் ராமா ராஜ் என்பது தெரிய வந்தது.

இந்த விவகாரத்தில்,  சுகேஷ் சந்திரா மற்றும், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வின் மனைவி சம்பந்தப்பட்டதற்கான ஆதாரங்களை சிபிஐ சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது. இவர்களுக்கும், சுகேஷ் சந்திராவுக்கும் தொடர்பு உள்ளதாகவும்,  இவர்கள் ஒரு மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான பணத்தை திரட்டும் வகையில் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், தற்போது அவர்கள் சிபிஐ வளையத்திற்குள் சிக்கி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.