பயிற்சியின்போது சுகோய் போர் விமானம் கீழே விழுந்து விபத்து!

தேஸ்பூர்:

யிற்சியில் ஈடுபட்டிருந்த சுகோய் ரக விமானம் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளது. விமானிகள் தப்பித்துவிட்ட நிலையில், விமானம் தீப்பிடித்து எரிந்தது.

அஸ்ஸாம் மாநிலத்தின் தேஸ்பூர் என்ற இடத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான  சுகோய் 30 (Sukhoi 30 MKI fighter jet) என்ற ரகத்தை சேர்ந்த போர் விமானம் பயிற்சியில் ஈடு பட்டிருந்தது. அப்போது விமானிகளிடமிருந்து கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையை நோக்கிப் பாய்ந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த விமானத்தின் விமானியும், துணை விமானியும் அவசரகால பாராசூட் வழியாக கீழே குதித்தனர். பயிற்சி விமானம் அந்த பகுதியில் உள்ள வயல்வெளியில் விழுந்து நொறுங்கி   தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்து இன்று காலை 8.30 மணி அளவில் நடைபெற்றதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.