மாவோயிஸ்டுகளை ஒடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாக, சத்தீஸ்கர் தாக்குதலில் உயிரிழந்த வீரரின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 25 வீரர்களில் ராம் மெஹரும் ஒருவர். இவருக்கு மனைவி, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகன், எட்டாம் வகுப்புப் படிக்கும் மகள் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், சண்டிகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்த தமது மகனை மாவோயிஸ்டுகள் கொன்று விட்டதாக , அவரது தந்தை  பூரண் சந்த் வேதனை தெரிவித்துள்ளார். மாவோயிஸ்டுகள் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடுதான் என்ன என்று  அவர் கேள்வி எழுப்பி  உள்ளார். பணியில் இருக்கும் வீரர்கள் மாவோயிஸ்டுகளால் கொல்லப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில், அதனைத் தடுக்க மத்திய அரசு உருப்படியாக எதையுமே செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

 

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட பஞ்சாப்பைச் சேர்ந்த சிஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் ரக்பீர்சிங்கின் சகோததரும் மத்திய அரசுக்கு இதே கேள்வியை எழுப்பி உள்ளார். மத்திய உளவுத்துறையின் தோல்வியையே இந்தத் தாக்குதல் உணர்த்துவதாக அவர் கூறியுள்ளார். மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் விவகாரத்தில், பாதுகாப்பில் ஈடுபடும் வீரர்களுக்கு குறிப்பிட்ட அளவு சுதந்திரம் கொடுக்கப்பட்டால்தான், அவர்களை முற்றிலும் ஒழிக்க முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார். மாவோயிஸ்ட் தீவிரவாதத்தை ஒழிக்கும் பிரச்னையில், மத்திய அரசின் தெளிவற்ற நிலைப்பாடு காரணமாகவே, வீரர்கள் தங்களது உயிரைத் தியாகம் செய்யும் நிகழ்வுகள் தொடர்வதாக ரக்பீர்சிங்கின் சகோதரர் சாடியுள்ளார்.

 

Sukma attack: Family members of martyred CRPF soldiers question government’s inaction

 

_____________________________________________________________________________________________________