இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி .

.சுல்தான் படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.கீதா கோவிந்தம்,டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்நிலையில் தீபாவளி பரிசாக சுல்தான் படக்குழுவினர் ஒரு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். பாவாடை தாவணியில் ராஷ்மிகவுடன், கார்த்தி அமர்ந்திருக்கும் இந்த போட்டோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.