சென்னை:

கோடை விடுமுறையின்போது, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் வகையில், இந்தியன் ரயில்வே கோடைகால சிறப்பு ரயில்களை இயக்குகிறது. அதற்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்:

ஏப்ரல் 8, 15, 22, 29 ஆகிய தேதிகள் மற்றும், மே 6, 13, 20, 27 தேதிகளில்  தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு மாலை 4.45 மணிக்கு ரயில் புறப்படும். இந்த ரயில் அடுத்த நாள் காலை 5.25 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, மறுமார்க்ககமாக  நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 9, 16, 23, 30, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25, ஜூலை 2 ஆகிய தேதிகளில் கோடை கால சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் நாகர்கோவிலில் இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 ம்ணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது.

மேலும்,

எர்ணாகுளத்தில் இருந்து ஏப்ரல் 4, 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30, ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு கட்டண ரயில் காலை 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடைகிறது.

வேளாங்கண்ணியில் இருந்து ஏப்ரல் 5, 12, 19, 26, மே 3, 10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு கட்டண ரயில் மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு எர்ணாகுளம் வந்தடைகிறது.

எர்ணாகுளத்தில் இருந்து ஏப்ரல் 2, 9, 16, 23, 30, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் சிறப்பு கட்டண ரயில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடைகிறது.

ராமேஸ்வரத்தில் இருந்து ஏப்ரல் 3, 10, 17, 24, மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு எர்ணாகுளம் வந்தடைகிறது.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரயில்கள் ரத்து

சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரயில் தடத்தில், செங்கல்பட்டு பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில்களான செங்கல்பட்டு, அரக்கோணம் மார்க்கத்தில் செல்லும் தட எண்கள் 40521, 40900, 40523, 40525, 40527, 40529, 40531 ஆகியவை இன்று ரத்து செய்யப்படுகின்றன.

அதேபோல, புறநகர் ரயில்களான செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே செல்லும் ரயில்கள் 42501, 40530, 40532, 40534, 40536, 40538, 40540 ஆகிய தட எண் கொண்ட ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.