தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் கோடைகால சிறப்பு ரயில்கள் விவரம்……

சென்னை:

கோடை விடுமுறையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு தெற்கு ரயில்வே கோடை கால சிறப்பு ரயில்களை இயக்குகிறது.  திருச்சி வழியாக சென்னையில் இருந்து நாகர்கோவில், தூத்துக்குடிக்கு கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து  தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

தாம்பரம்-நாகர்கோவில் கோடை கால சிறப்பு ரயில் ( வண்டி எண்.06063) ஜூன் 3, 10, 17, 24 ஜூலை 1 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து காலை 11.20 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு மறுநாள் அதிகாலை 2 மணிக்கு வந்து சேரும்.

நாகர்கோவில்- தாம்பரம் கோடை கால சிறப்பு கட்டண ரயில்( வண்டி எண்.06064) ஜூன் 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்துக்கு மறுநாள் காலை 5.05 மணிக்கு வந்து சேரும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை எழும்பூர்-தூத்துக்குடி கோடை கால சிறப்பு ரயில் ( வண்டி எண்.06053) ஜூன் 3, 10, 17, 24, ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரிலிருந்து இரவு 6.50 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு மறுநாள் காலை 7.10 மணிக்கு சென்று சேரும்.

தூத்துக்குடி- சென்னை எழும்பூர் கோடை கால சிறப்பு ரயில் (வண்டி எண்.06054) ஜூன் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியிலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு வந்து சேரும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வாஞ்சிமணியாச்சி ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை எழும்பூர்-திருநெல்வேலி கோடை கால சிறப்பு ரயில் ( வண்டி எண்.06003) ஜூன் 7, 14, 21, 28, ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரிலிருந்து இரவு 6.50 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு மறுநாள் காலை 6 மணிக்கு வந்து சேரும்.

திருநெல்வேலி- சென்னை எழும்பூர் கோடை கால சிறப்பு ரயில் (வண்டி எண்.06004) ஜூன் 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியிலிருந்து இரவு 6.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு வந்தடையும்.

இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

திருச்சி-எர்ணாகுளம் கோடை கால சிறப்பு கட்டண ரயில் ( வண்டி எண்.06026) ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் திருச்சியிலிருந்து முற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு எர்ணாகுளத்திற்கு மறுநாள் காலை 8.45 மணிக்கு வந்து சேரும். இந்த ரயில் ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, திருச்சூர், அலுவா, எர்ணாகுளம் நகரம் ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

திருச்சி-கோயம்புத்தூர் கோடை கால சிறப்பு கட்டண ரயில்( வண்டி எண்.06025) ஜூன் 4, 11, 18, 25, ஜூலை 2 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூரிலிருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு காலை 11.15 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

You may have missed