புகழேந்திக்கு சம்மன்: சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு

பெங்களூரு:

ம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவுமான டிடிவி தினகரன் இன்று பெங்களூரு அக்ரஹார சிறைச்சாலைக்கு சென்று சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து பேசினார்.

இன்றைய சந்திப்பின்போது டிடிவி தினகரனுடன்,  வழக்கறிஞர்கள் அசோகன், சுரேஷ் மற்றும் சசிகலாவின் நேர்முக உதவியாளர் கார்த்திக்கும் சென்றிருந்தனர்.

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கில், உச்சநீதி மன்றம் விசாரிக்க மறுத்து, சென்னை உயர்நீதி மன்றத்திற்கே திருப்பி அனுப்பப்பட்ட நிலையில்,  தற்போதைய சூழ்நிலை குறித்து சசிகலாவுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், ஜெ.மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அப்பல்லோ மருத்துவமனை சென்று பார்வை யிட உள்ளது குறிதும், சசிகலாவுக்கு சிறையில் வசதி செய்து கொடுக்க ரூ.2 லட்சம் லஞ்சம் கொடுத்தது தொடர்பாக புகழேந்திக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி உள்ளது குறித்தும்  ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.