சசிகலாவுக்கு சலுகை பெற சிறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சம்….புகழேந்திக்கு சம்மன்

பெங்களூரு:

ரூ.2 கோடி லஞ்ச புகாரில் டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கர்நாடக சிறையில் சசிகலாவுக்கு சலுகை வழங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு தொடரப்பட்டது. இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்திக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

சசிகலாவுக்க கூடுதல் அறை வசதிகள், சிறப்பு சமையல், மருத்துவம், உதவியாளர்கள் உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் வழங்க ரூ.2 கோடி ரூபாய் வரை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.