சம்மன் பெற்றுள்ள தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்கள்….

சென்னை:

மிழகத்தின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் வெவ்வேறு வகையான புகார்களின் பேரில், விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்ட சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது… ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு வழங்குவார்களா என்பது கேள்விக்குறியானதுதான்…

நடிகர் ரஜினிகாந்துக்கு ஏற்கனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரித்து வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், சம்மன் அனுப்பி வரும் 25ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுபோல, சமீபத்தில் நடைபெற்ற இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாகவும், நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழக காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது.  பூந்தமல்லி அருகே இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெற்றபோது எதிர்பாராதவிதமாக கிரேன் சரிந்து விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மதுசூதனராவ் , ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் பலியாகினர்.

இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து தொடர்பாக நடிகர் கமல் மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

“விபத்து நடந்த நேரத்தில் நாங்கள் நேரில் கண்ட அனைத்து சாட்சிகளையும் கேள்வி கேட்க இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். கிரேன் ஆபரேட்டரின் தரப்பில் ஏதேனும் அலட்சியம் உள்ளதா என்பதையும் அவர்கள் ஆராய்வார்கள். புதன்கிழமை இரவு இந்தியன் -2 படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திலேயே இருந்த ஷங்கர், கமல்ஹாசன் மற்றும் பெண் முன்னணி காஜல் அகர்வால் ஆகியோரும் குறுகிய தப்பியதாக தெரிவித்துள்ள நிலையில், நடந்தது என்ன என்பது குறித்து தெரிவிக்கும்படி காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

இந்த சம்மனுக்கு கமல்ஹாசன் நேரில் சென்று பதில் அளிப்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்விதான்னன.

அதுபோல, ரஜினிகாந்துக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு அவரது வழக்கறிஞர் சார்பில் பதில் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்மன் சம்பவங்கள் அவர்களது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தற்போதுசம்மன் காலம் போலும்….