’பேட்ட’ இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதில் தாமதம் – விஜய் சேதுபதிக்கு தனி விமானம் அனுப்பிய கலாநிதிமாறன்

ரஜிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக விஜய் சேதுபதிக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதிமாறன் தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

vijay

பெரிய அளவில் எதிர்ப்பார்த்திருந்த ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன் வசூல் சாதனையையும் புரிந்து வருகிறது. இந்நிலையில் ரஜினியின் அடுத்தப்படத்தின் தயாரிப்பு வேலைகள் தொடங்கியதும் ரசிகர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ திரைபடத்தில் ரஜினி நடித்துள்ளார். இதில் த்ரிஷா, சிம்ரன், விஜய்ச்சேதுபதி, நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

sethupathi

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 9ம் தேதி சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவிற்கு முன்னதாகவே ரஜினி காந்த், கலாநிதி மாறன் உள்ளிட்ட படக்குழுவினர் வருகை தந்தது. ஆனால், விஜய் சேதுபதி மட்டும் தாமதமாக வந்தார்.

அதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. ஒசூர் படைப்பிடிப்பில் இருந்து விழாவில் பங்கேற்பதற்காக விஜய் சேதுபதி சென்னை வந்துள்ளார். அவர் வருவதற்காக ஓசூரில் இருந்து சென்னைக்கு கலாநிதிமாறனின் சக் பிக்சர்ஸ் நிறுவனம் தனி விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது. விமானத்தில் விஜய் சேதுபதி எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது பகிரப்பட்டு வருகிறது.