கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியுடன் சிம்ரன்: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

சென்னை:

ன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்னும் பெயர் சூட்டப்படாத ரஜினி படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை சிம்ரன் நடிக்கிறார். இதை படத்தயாரிப்பு நிறுவன மான சன் பிக்சர்ஸ் உறுதி செய்துள்ளது.

நடிகை சிம்ரன்  முதன்முதலாக நடிகர் ரஜினிகாந்துடன் நடிப்பது குறிப்பிடத்தக்கது. அதை அவர் தனது அதிர்ஷ்டம் என்று கூறி உள்ளார்.

இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், இசை அனிருத் அமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய  அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் ரஜினியின் அடுத்த படத்தில், நடிகை சிம்ரன், பாலிவுட் நடிகர் நவாசுத்தீன் சித்திக் இணைகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகை சிம்ரன் முதல் முறையாக ரஜினியுடன் நடிக்கிறார். அதுபோல தனது தனித்தன்மை நடிப்பால் பாலிவுட்டில் பல விருதுகளை பெற்றுள்ள முன்னணி நடிகர் நவாசுத்தீன் சித்திக் முதல் முறையாக ரஜினியுடன் நடிக்கிறார்.

 

கார்ட்டூன் கேலரி