கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாகும் சிம்ரன்!?

சென்னை:

ன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்னும் பெயர் சூட்டப்படாத படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசியலுக்கு வருவதாக அறிவித்த  ரஜினி, அதை ஓரங்கட்டிவிட்டு படப்பிடிப்பில் பிசியாகி வருகிறார்.  கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில்  சன் பிக்சர்ஸ் படத்தில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு  ஏற்கனவே டார்ஜிலிங்கில் நடைபெற்று முடிந்தது. அதைத்தொடர்ந்து சென்னை திரும்பி  ஓய்வெடுத்த  நிலையில், தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள படப் பிடிப்பில் கலந்துகொள்ள  ரஜினி மீண்டும் புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல நடிகர விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக ஏற்கனவே  தகவல்கள் வெளியானது. மேலும் பாபி சிம்ஹா உள்பட பலர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள  நிலையில், இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல நடிகை சிம்ரன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க  நயன்தாரா, திரிஷா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் பேசப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அதை ரஜினி விரும்பாததால், அவரது தோற்றத்திற்கு இணையாக மூத்த கதாநாயகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், நடிகை சிம்ரன் தேர்வு செய்யப்பட்டதாகவும், அவர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக  தகவல் வெளியாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி