விஜய் பிறந்த நாளை முன்னிட்டு சர்கார் இரண்டாம் போஸ்டர் : சன் பிக்சர்ஸ்

 

சென்னை

விஜய் பிறந்த நாளை முன்னிட்டு சர்கார் படத்தின் இரண்டாம் போஸ்டரை சன்  பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

விஜயின் 62 ஆவது படத்துக்கு சர்கார் என பெயர் சூட்டப்பட்டுள்ளத்.   சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார்.    ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகும் இந்தப் படம் தீபாவளி அன்று வெளியிடப்பட உள்ளது.

இந்தப் படத்தின் முதல் ஸ்டில் நேற்று வெளியிடப்பட்டது.  இந்நிலையில் சன் பிக்சர்ஸ் இன்று இரவு சரியாக 12 மணிக்கு ஒரு டிவிட்டர் பதிவும் இரண்டாம் போஸ்டரும் வெளியிட்டுள்ளது.

அந்த பதிவில், “பிறந்த நாள் வாழ்த்துக்கள் தளபதி விஜய்.   இதோ சர்கார் படத்தின் இரண்டாம் போஸ்ட்ர்” என பதியப்பட்டுள்ளது