சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் படத்தை இயக்கப்போவது யார்…?

சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ படம் வரும் 31-ம் தேதி வெளியாகவுள்ளது. அதை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ வெளியாகவுள்ளது..

ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கி வரும் ‘சூரரைப் போற்று’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா.

இந்நிலையில் ‘சூரரைப் போற்று’ படத்தை முதலில் ஹரி இயக்குவதாக இருந்தது. ஆனால் சில சர்ச்சைகளால் ஹரி இயக்கவில்லை.

தற்போது, சூர்யா கொடுத்த கால்ஷீட்டுக்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதை கேட்கும் படலத்தைத் தொடங்கியுள்ளது சன் பிக்சர்ஸ்.

கார்ட்டூன் கேலரி