விஜய் புதிய படம்: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு


மெர்சல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜய்யின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. விஜய் நடிக்கும் 62வது படமான இந்த புதிய படத்தை ஏ.ஆர்.முருகாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இத்தகவலை ஏற்கெனவே ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்திருந்தாலும், சன் பிக்சர்ஸ் சார்பில் தகவல் ஏதும் வெளியாக வில்லை. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவன ட்விட்டர் பக்கத்தில், தற்போது இப்படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

“விஜய்யின் 62-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது” என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இசை – ஏ.ஆர்.ரஹ்மான்:  ஒளிப்பதிவு – வாளராக கிரிஷ் கங்காதரன்: கலை இயக்குநர் – சந்தானம்.

நாயகியாக கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

புதிய படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

 

You may have missed