4 பேருக்கு கொரோனா தொற்று; சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு….!

4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தளத்தில் வழக்கமாக எடுக்கப்படும் கொரோனா பரிசோதனையில் இன்று (டிசம்பர் 23) 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என்றாலும், ஹைதராபாத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார்கள். இது தொடர்பாக சன் பிக்சர்ஸ் தரப்பு விளக்கமளித்துள்ளது.

“‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் வழக்கமாக நடைபெறும் பரிசோதனையின் போது, படக்குழுவைச் சேர்ந்த 4 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட மற்ற குழுவினர் யாருக்கும் தொற்று இல்லை. அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளது .