இரவில் பதட்டத்தை கிளப்பிய சன் பிக்சர்ஸ்

சென்னை

நேற்று இயக்குனர் ஏ ஆர் முருகதாசை கைது செய்ய காவல்துறையினர் சென்றுள்ளதாக சன் பிக்சர்ஸ் வெளியிட்ட த்கவல் பரபரப்பை ஏற்படுத்தியது

 

விஜய் நடித்த சர்கார் திரைப்படம் கடும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. பல இடங்களில் அந்தப் படத்தை திரையிடக் கூடாது என அதிமுகவினர் போராடி வருகின்றனர். ஒரு சில திரையரங்குகள் அந்தப் படம் திரையிடுவதை நிறுத்தி உள்ளன. பல காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தப் படத்தை இயக்கிய ஏ ஆர் முருகதாஸ் மீதும் அதிமுகவினர் கடும் கோபத்தில் உள்ளனர். அவர் மீது அரசு சார்பில் வழக்கு தொடரப்பட உள்ளதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இந்தப் பட தயாரிப்பாளர்களான சன் பிக்சர்ஸ் தங்கள் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை நேற்று நள்ளிரவில் பதிந்தனர். “தற்போதைய செய்தி : இயக்குனர் ஏ ஆர் முருகதாசை கைது செய்ய அவர் வீட்டுக்கு காவல்துறையினர் சென்றுள்ளனர்” என்னும் அந்த பதிவு கடும் பரபரப்பை உண்டாக்கியது.

சன் பிக்சர்ஸின் மற்றொரு பதிவில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தனது வீட்டுக்கு காவல்துறையினர் சென்று கதவை பலமாக தட்டியதாகவும் தாம் வீட்டில் இல்லை என்பதை தெரிந்துக் கொண்டு அங்கிருந்து அகன்று விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போது அவர் வீட்டருகே காவல்துறையினர் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Sun pictures tweeted that Police was about to arrest AR Murugdoss
-=-