கோவாவில் தாய் சோனியாவுடன் ஓய்வெடுக்கும் ராகுல்: மீன் உணவு, செல்ஃபி என குதூகலம்…

பனாஜி:

கில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்  ராகுல்காந்தி, தனது தாயார் சோனியா காந்தியுடன் 3 நாட்கள் தனிப்பட்ட சுற்றுப்பயணமாக கோவாவில் முகாமிட்டு உள்ளார். அங்கு கடற்கரை அருகே உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஓய்வெடுத்து வரும் அவர்கள், அங்கு கடற்காற்றையும், கடல் உணவுகளையும் ரசித்து ருசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை தெற்கு கோவாவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றுக்கு சென்ற ராகுல், சோனியா  ஆகியோர் அங்கு அமைதியாக அமர்ந்து மதிய உணவு உட்கொண்டனர்.

சோனியா மற்றும் ராகுலின் எளிமையான நடவடிக்கைகளை கண்ட மற்ற வாடிக்கையாளர்கள் அவர்களுடன் புகைப்படங்களையும் செல்ஃபிகளையும் எடுத்துக்கொண்டனர்.

ஓட்டலில் ராகுலின் செல்ஃபி எடுத்த கோவாவைச் சேர்ந்த பிரபல பல் மருத்துவர் ரச்னா ஃபெர்னாண்டஸ், அந்த புகைப்படத்தை  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து கூறியுள்ள கோவா மாநில  காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்,  கட்சித் தலைவர் மற்றும் சோனியா காந்தி தனிப்பட்ட முறையில் கோவா வந்துள்ளதாகவும், அவர்கள் எந்தவொரு அரசியல் நிகழ்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை என்றும் என்றும் தெரிவித்து உள்ளார்.

ராகுலுடன் செல்ஃபி எடுத்த பல் மருத்துவரான ரச்னா,  நான் அந்தஉ ணவு விடுதியில் எனது உறவினர்களுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, சோனியாவும் ராகுலும் அமைதியாக உணவு உண்டதை கண்டேன். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அவர்களை அணுகி செல்ஃபி எடுக்கலாமா என்று கேட்டேன்… அதைத்தொடர்ந்து இருவரும்  புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அவரின் வசீகரம் மற்றும் எளிமையான நடவடிக்கையால்  நான் பிரமிப்பு அடைந்தேன் என்று கூறி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Goa holiday, holiday with mother, rahul gandhi, seafood, seafood and selfies, selfies, Sonia Gandhi, Sun, கோவா ஓய்வு, செல்ஃபி, சோனியா, மீன் உணவு, ராகுல்
-=-