‘துக்ளக் தர்பார்’ தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியது சன் டிவி…!

தில்லி பிரசாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’ .

விஜய் சேதுபதி ஜோடியாக அதிதி ராவ் நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு பிரேம் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

‘துக்ளக் தர்பார்’ படத்தின் பூஜை, கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெற்றது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. அதற்கு முன்பே படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ளது சன் டிவி.