ஒரேஆண்டில் தலா ரூ.87.50 கோடி சம்பாதித்த சன்டிவி ஓணர் கலாநிதி மாறன், காவேரி கலாநிதி…

சென்னை: ஒரேஆண்டில் தலா ரூ.87.50 கோடி சம்பாதித்தவர்கள்  சன்டிவி ஓணர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி என்பது தெரிய வந்துள்ளது. அதுபோல, இந்தியாவிலேயே அதிகம் ஊதியம் பெறும் பெண் செயல் அதிகாரி என்ற பெருமையை, சன் குழுமத்தின் இயக்குநர் கலாநிதி மாறனின் மனைவி காவேரிதான் பெற்றுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக அவர் இந்த சாதனையை தக்க வைத்துக்கொண்டுளாளர்.

சன் டிவி நெட்வொர்க்கின் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் 2019-20 ஆம் ஆண்டில் தலா ரூ .87.50 கோடி சம்பாதித்து இருப்பதாகவும், நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நிர்வாகிகளாக தொடர்ந்து இருந்து வருவதாகவும், பிசினஸ் ஸ்டாண்டர்ட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில்,  சன் டிவி நெட்வொர்க்கின் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அவரது மனைவி காவேரி கலாநிதி ஆகியோர் நிதியாண்டில்இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் கார்ப்பரேட் நிர்வாகிகளாக தொடர்ந்து இருந்து வருவதாகவும்,  2019-20 ஆம் ஆண்டில் தம்பதியினர் தலா ரூ .87.50 கோடி சம்பாதித்தனர் என்று தெரிவித்து உள்ளது.

இதில், ரூ.13.87 கோடி ரூபாய் சம்பளம் என்றும்,  73.63 கோடி ரூபாய் ex-gratia and bonus என்றும்  அந்நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தம்பதியினர் கடந்த 2018ம் நிதியாண்டு முதல் தங்களது சம்பளத்தை உயர்த்தவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இவர்கள் மட்டுமின்றி, சன் டிவி நெட்வொர்க் நிர்வாக இயக்குனர் ஆர் மகேஷ் குமார் மொத்தம் 1.78 கோடி ரூபாயை சம்பாதித்து உள்ளதாகவும், அதில் ரூ .1.16 கோடி சம்பளம் மற்றும் ரூ. 0.62 கோடி ex-gratia and bonus என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பூட்டுதல் சமயத்தில் சற்றே வருவாய் குறைந்து வந்த நிலையிலம்,   ​​பூட்டுதலுக்கு முந்தைய நிலைகளில் 75 சதவிகிதம் வருவாய் மீண்டுள்ளதாகவும், கடந்த மாதம், தற்போதைய மாதங்களில் (ஜூலை, ஆகஸ்டு) நிறுவனத்தின் வருவாய் உயர்ந்து இருப்பதாகவும்  அந்நிறுவனத்தின் ஆண்டறிக்கையில்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.