முறையாக அறிவித்துத் தான் திருமணம் செய்வேன், வதந்தி பரப்பாதீர் என கெஞ்சும் சுனைனா…!

--

தமிழில் ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் நாயகியாக அறிமுகமானார் சுனைனா.

சரியான கதாபாத்திரங்கள் அமையாதக் காரணத்தில் வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

இதனிடையே தற்போது அவருக்கு திருமணமாகிவிட்டது என்று வதந்தி பரவியுள்ளது .

இது தொடர்பாக சுனைனா, “எனக்குத் திருமணமாகி விட்டதாக தகவல் பரவி வருகிறது. பலரும் இது தொடர்பாக என்னிடம் விசாரித்த வண்ணமிருக்கிறார்கள். இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. திருமணம் தொடர்பான தகவலில் உண்மையில்லை. இது வெறும் வதந்தி தான்.

இந்த வதந்தி எப்படி உருவானது, யார் உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை. எனது திருமணம் ரகசியமாக நடைபெறாது. மாப்பிள்ளை முடிவானதும், முறையாக அறிவித்துத் தான் திருமணம் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.