சுனந்தாபுஷ்கர் மரண வழக்கு: முன்னாள் அமைச்சர் சசிதரூர் இன்று கோர்ட்டில் ஆஜர்

டில்லி:

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் நிர்வாகியுமான சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

காங்கிரஸ் தலைமையிலான  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தவர் சசிதரூர். இவரது காதல் மனைவி சுனந்தா புஷ்கர். .கடந்த 2014ம் ஆண்டு  டில்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் விஷம் அருந்திய நிலையில் பிணமாக கிடந்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது.  சசி தரூர் மீது பெண்ணை கொடுமை செய்தல் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பான சசிதரூரிடம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, டில்லி காவல்துறை  டில்லி மாநகர நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் சிங் முன்னிலையில்  குற்ற பத்திரிகை தாக்கல் செய்தது.

இதுதொடர்பான   வழக்கில் ஜூலை 7ம் தேதி சசிதரூர்  நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என, டில்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.

இதற்கிடையில், இந்த வழக்கு காரணமாக தான் கைது  செய்யப்படலாம் என கருதி, சசிதரூர் நீதி மன்றத்தை அணுகி முன்ஜாமின் பெற்றார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் சசிதரூர்  இன்று கோர்ட்டில் ஆஜராக உள்ளார்.