‘அரண்மனை’ படத்தின் 3-ம் பாகத்தை உருவாக்க, இயக்குநர் சுந்தர்.சி திட்டம்…!

‘காஞ்சனா 3’ படத்துக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து ‘அரண்மனை’ படத்தின் 3-ம் பாகத்தை உருவாக்க, இயக்குநர் சுந்தர்.சி திட்டமிட்டுள்ளார்.’அரண்மனை 3′ எடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை’ மற்றும் ‘அரண்மனை 2’ ஆகிய படங்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றவையாகும். ஆகையால், ‘அரண்மனை 3’ படத்தை தனது சொந்த நிறுவனமான அவ்னி சினி மேக்ஸ் மூலமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

தற்போது ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தைத் தொடர்ந்து விஷால், தமன்னா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி.

விஷால் படத்தின் பணிகளை முடித்தவுடன் ‘அரண்மனை 3’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

கார்ட்டூன் கேலரி