இயக்குநர் சுந்தர் சி படங்களை இயக்குவதைத் தாண்டி, அவ்னி மூவிஸ் நிறுவனத்தின் கீழ் படங்களை தயாரித்தும் வருகிறார்.

‘நான் சிரித்தால்’ படத்தை தொடர்ந்து தற்போது ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார் . அந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.

இது கன்னட நகைச்சுவை படமான ‘மாயாபஜார் 2016’-இன் தமிழ் ரீமேக்காகும்.

இப்படத்தில் தமிழ் ரீமேக்கில் பிரசன்னா, ஷாம், அஸ்வின் காகுமனு, யோகி பாபு, ஸ்ருதி மராத்தே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சத்யா இசையமைக்க, கிச்சா ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குநராக பிரேமும் மற்றும் நடன இயக்குநராக தினேஷும் பணியாற்றுகிறார்கள். தயாரிப்பு மேற்பார்வை பி.பாலகோபி.