அகமதாபாத்: இங்கிலாந்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அணியில் எடுக்கப்படாத தமிழ்நாட்டின் வாஷிங்டன் சுந்தர், 3வது போட்டிக்கு மீண்டும் எடுக்கப்பட்டும், அவருக்கு 1 ஓவர்கூட வழங்கப்படவில்லை. பேட்டிங்கை மனதில் வைத்து அவர் அணிக்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்துக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் வீசப்பட்ட 48.4 ஓவர்களில், சுந்தருக்கு 1 ஓவர்கூட தரப்படவில்லை.

சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய சுந்தர், பந்துவீச்சில் விக்கெட் எதுவும் எடுக்காவிட்டாலும், முதல் இன்னிங்ஸில் 85 ரன்கள் எடுத்து நாட்அவுட்டாக இருந்தார்.

ஆனால், அவருக்குப் பதிலாக இரண்டாவது டெஸ்ட்டில் எடுக்கப்பட்ட குல்தீப், பெளலிங் & பேட்டிங் என இரண்டிலும் சாதிக்கவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார்.

எனவே, ஆஸ்திரேலியாவிலும் பேட்டிங்கில் கலக்கிய வாஷிங்டன் சுந்தர் அணியில் இருப்பதே அதிகம் பயன்தரக்கூடியது என்று முடிவிற்கு கேப்டன் கோலி வந்திருக்கலாம். மேலும், 4 பந்துவீச்சாளர்களின் பெளலிங் எடுபடாதபோது, 5வது பந்துவீச்சாளராக சுந்தர் எடுபடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.