கூகுளில் முட்டாள் என தேடினால் ஏன் டிரம்ப் புகைப்படம் வருகிறது? – அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சை விளக்கம்

கூகுளில் idiot என்று தேடினால் அதிபர் டிரம்ப்பின் புகைப்படம் வருவது குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வில் அந்நிறுவனதின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை விளக்கம் அளித்துள்ளார்.

Sundar

சீனாவின் தணிக்கை முறைகளுக்கு ஏற்ப சேவைகளை அளிப்பதில் கூகுள் நிறுவனம் சமரசம் செய்து கொள்கிறது எனக்கூறி, அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக் குழுவில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகார் குறித்த விசாரணைக்கு நேரில் ஆஜராக சுந்தர் பிச்சைக்கு உத்தரவிடப்படது. அதன்படி ஆஜரான சுந்தர் பிச்சை சீனாவுக்கான சேவைகளை அளிப்பதில் வெளிப்படையாக இருப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு விடை அளித்தார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சரமாரிக் கேள்விகளுக்கு சற்றும் பதட்டமடையாமல் சுந்தர்பிச்சை பொறுமையாக பதில் அளித்தார்.

இந்நிலையில் பல காட்டமான கேள்விகளுக்கு இடையே ஜன நாயக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ லாப்கிரின் சுந்தர் பிச்சையிடம், ” அமெரிக்காவில் சமீபத்தில் அதிகம் தேடப்படும் வார்த்தையாக முட்டாள்(idiot) இருக்கிறது . அந்த வார்த்தையை (idiot) கூகுளில் தேடும்போது அதிபர் டிரம்பின் படம் காட்டுவது ஏன் ? “ என்று கேள்வி எழுப்பினார்.

trump

அதற்கு பதிலளித்து பேசிய சுந்தர்பிச்சை, “ இதில் கூகுளுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. கூகுளில் நீங்கள் ஒன்றை தேடினால் லட்சணக்கான பயன்பாட்டாளர்கள் அதற்கு எந்த கீ வேர்டை பயன்படுத்துகிறார்களோ அதன் அடிப்படையில் தான் உங்களுக்கான முடிவை காட்டும். சில நேரங்களில் இது பிரபலங்களின் அடிப்படையிலும் முடிவை காட்டலாம்.

எனவே இதற்காக உங்கள் போன் பின்னால் சிறிய நபர் அமர்ந்து கொண்டு நீங்கள் தேடுவதற்கான முடிவை அவர் காட்டுகிறார் என்று அர்த்தமில்லை. உங்கள் தொலை பேசியை கூகுள் உருவாக்குவதில்லையே “ என்று தெரிவித்தார்.