பிரிஸ்பேன்: சர்வதேச டெஸ்ட் போட்டியில், முதன்முதலாக களமிறங்கி, இந்தியளவில் ஒரு சாதனையைப் படைத்துள்ளது வாஷிங்கடன் சுந்தர் & ஷர்துல் தாகுர் இணை.

இவர்கள் இருவருமே அரைசதம் அடித்ததோடு, இந்திய அணியில் 7வது விக்கெட்டுக்கு இணைந்து 67 ரன்கள் அடித்த சாதனையை செய்துள்ளனர் இந்த இரு இளம் பேட்ஸ்மென்களும்.

இதற்கு முன்னதாக, கடந்த 1991ம் ஆண்டு, கபில்தேவ் & மனோஜ் பிரபாகர் இணை, 7வது விக்கெட்டுக்கு இணைந்து 58 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இருந்தது. தற்போது, அந்த நீண்டகால சாதனையை முறியடித்துள்ளது இந்த புதிய வீரர்களின் ஜோடி.

கடந்த 2014ம் ஆண்டு, எம்எஸ் தோனி & அஸ்வின் ஜோடி, 7வது விக்கெட்டுக்கு சேர்த்த 57 ரன்கள், மூன்றாவது அதிகபட்ச ரன்கள்.