பூர்ணாவின் ‘சுந்தரி’ ட்ரைலர் வெளியீடு….!

கடந்த 2008-ம் ஆண்டு தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா.

பூர்ணா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் சுந்தரி. கல்யாண்ஜி கோக்கனா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அர்ஜுன் அம்பதி முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

ரிஸ்வான் இந்த படத்தை தயாரித்துள்ளார். இதன் ட்ரைலர் காட்சிகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . பூர்ணாவின் துணிச்சலான நடிப்பை பாராட்டி வருகின்றனர் திரை ரசிகர்கள். இதன் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.