ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரூபாய் நோட்டுக்களை அச்சடித்துத் தள்ளும் நாசிக் ‘’பண தொழிற்சாலை’’..

ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரூபாய் நோட்டுக்களை அச்சடித்துத் தள்ளும் நாசிக் ‘’பண தொழிற்சாலை’’..
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக்கில் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் தொழிற்சாலை (  THE CURRENCY NOTE PRESS)  உள்ளது.
இங்கு அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகள் தான் நாடு முழுவதும் புழக்கத்தில் விடப்படுகிறது.
நடப்பு நிதி ஆண்டில் 5 ஆயிரத்து நூறு மில்லியன் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்து இருந்தது.
கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டதால், அந்த இலக்கை எட்ட முடியவில்லை.
மார்ச் மாதம் 22 ஆம் தேதி முதல் இரண்டு மாதங்கள் இந்த ‘’பண தொழிற்சாலை’’ இயங்கவில்லை. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட போது, சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருந்ததால், அவர்களை வேலை செய்ய அனுமதிக்கவில்லை
இதனால், ரிசர்வ் வங்கியின் இலக்கை. எட்ட முடியவில்லை.
எனவே அந்த இலக்கை அடையும் நோக்கத்தில் நாசிக்கில் உள்ள ’’கரன்ஸி  நோட் பிரஸ்’’ இப்போது ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்பட்டு வருகிறது.
50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் முழுமையாக அச்சடிக்கப்பட்டு விட்டன.
இப்போது 20 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வருகின்றன.
இதன் பின்னர் 10 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படும்.
நாசிக்கில் மொத்தம் 2 ஆயிரத்து 300 நிரந்தர ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
-பா.பாரதி.