ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கமாம் ஆனால், ரயில்கள் ஓடுமாம்- பெட்ரோல் பங்க் திறந்திருக்குமாம்!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால்,  தமிழகஅரசு இரவு நேர பொதுமுடக்ககம், மற்றும் ஞாயிறு முழு பொதுமுடக்ககம்  அறிவித்துள்ளது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அதனப்டி, 20.04.21 அதிகாலை முதல்  தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் ஞாயிறுக்கிழமைதோறும் பொதுமுடக்கம் அறிவித்துள்ளது. இதில், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

இரவு நேர முடக்கமானது , மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரவு நேர போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. அதாவது,  தமிழக அரசின் அறிவிப்பின்படி, இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை மட்டுமே தனியார் / பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.

இரவு நேரங்களில் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் மேற்கூறிய காலகட்டத்தில் (இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை) செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது.

 மற்ற நேரத்தில் மாநிலங்களுக்கு இடையேயான பொது/தனியார் பேருந்து சேவைகள் அனுமதிக்கப்படும். அந்த சமயத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசல் தவிர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை பின்பற்றி போக்குவரத்து இயக்கத்துக்கு அனுமதிக்கப்படுகிறது.

எனினும், அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமானநிலையம் / இரயில்நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் (பெட்ரொல், டீசல், எல்.பி.ஜி.) இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கு கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது. தமிழகத்தில் மிக முக்கியமான சித்திரை திருவிழா உள்பட கோவில் விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இரவு 10 மணிவரை இஸ்லாமியர்களின் நோன்புக்காகவும், காலையில் அவர்கள் 4 மணிக்கு நோன்பு திறக்கும் வகையில் ஒருதலைப்பட்சமாக தமிழகஅரசு அறிவித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

மசூதிகளில் இஸ்லாமியர்கள் எந்தவித சமூக இடைவெளியின்று கூட்டம் கூட்டமாக தொழுகையில் ஈடுபடுவதை தடுக்க திரானி இல்லாத தமிழகஅரசு, , அவர்களுக்கு சலுகை வழங்கும் வகையில்,  மாற்று மதத்தினர் விழாக்களுக்கு தடை போட்டுள்ளது கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

அதுபோல, ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் பங்குகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று பொதுமுடக்கம் என அறிவித்துவிட்டு, யாரும்  வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி உத்தரவுகளை பிறப்பித்திருக்கும்பொது, பெட்ரோல் பங்குகள் மட்டும் யாருக்காக திறக்கப்பட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவையடுத்து அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு  அறிவிக்கப்பட்டதுடன், இரவு நேரம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுப்போக்குவரத்து உள்பட அனைத்து போக்குவரத்துக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இரவு நேர ஊரடங்கு தனியார் மற்றும் பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸி போன்றவற்றுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  அத்துடன் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைக்கு இரவில் தடை விதித்தும் அரசு அறிவித்துள்ளது. ஆனால், தனியார் பேருந்து சேவைகளுக்கு சில விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்திலும் தமிழகஅரசின் பொதுமுடக்க அறிவிப்பு கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

இதற்கிடையில்,  தமிழகத்தில் அனைத்து ரயில்களும் வழக்கம்போல இயங்கும் என்று தெரிவித்துள்ளது.  தமிழக அரசு, ரயில்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தெற்கு ரயில்வேயிடம் எழுப்பவில்லை. இதனால் ரயில்கள் வழக்கம்போல இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்போது, இரவு நேரங்களில் பயணம் செய்யும் ரயில் பணிகள், இரவு நேரத்தில் ரயில் நிலையத்தல் இறங்கும்போது, அவர்கள் போக வேண்டிய இடத்துக்கு எப்படி போக முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

அதுபோல, ஞாயிற்றுக்கிழமை ரயில்கள் இயக்கப்படும்போது,  அதில் பயணிகள்  எவ்வாறு பயணிக்க முடியும். ஞாயிறன்று முழு முடக்கம் இருக்கும்போது பயணிகள் ரயில் நிலையம் செல்ல முற்பட்டால், அவர்களை காவல்துறையினர் தடுக்க மாட்டார்களா?

பெட்ரோல் பங்குகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று பொதுமுடக்கம் என அறிவித்துவிட்டு, யாரும்  வீட்டை விட்டு வெளியேற முடியாத படி உத்தரவுகளை பிறப்பித்திருக்கும்பொது, பெட்ரோல் பங்குகள் மட்டும் யாருக்காக திறக்கப்பட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

இரவு பொதுமுடக்கம், ஞாயிறு பொதுமுடக்கம் என்ற பெயரில் தமிழகஅரசு கண்துடைப்புக்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, மக்களை குழப்பி இருப்பதோடு மட்டுமல்லாமல், மக்களிடையே மத நல்லிணக்கத்தையும் குலைக்க முயற்சி செய்வதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தமிழகஅரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் மற்றும் லாக்டவுன் – முழு விவரம்…