சென்னை: தமிழகத்தில் ஞாயிறு லாக்டவுன் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இன்று காலை முதலே அனைத்து கடைகளும், மார்க்கெட்டுகளும் திறந்துள்ளன. இதனால் மக்கள் வழக்கம்போல, அதிகாலையிலேயே கறிக்கடைகளில் குவியத் தொடங்கி விட்டனர்.  மேலும் தெனாவெட்டாக, எந்தவித பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றாமல், எப்போதும்போல ஜாலியாக சுற்றத் தொடங்கி விட்டனர்.

கொரோனா பொதுமுடக்கத்தின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு விலக்கப்பட்டு உள்ளதால்,   இன்று காலையிலேயே அனைத்து கடைகளும் வழக்கம் போல திறந்திருந்தன.

மக்களும் எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளையும் கண்டுகொள்ளாமல், எப்போதும் போல சுற்றத் தொடங்கி விட்டனர். பலர் முக்கவசம் அணியாமல் செல்வதையும் பார்க்க முடிகிறது. வாகனங் களும் எந்தவித கட்டுப்பாடுகள் இல்லாமல் இயக்கப்பட்டு வருகின்றன.

மாதத்தின் முதல் ஞாயிறு என்பதால், மக்கள் காலையிலேயே கறிக்கடைகளில் குவித்தொடங்கி விட்டனர். அங்கு சோசியல் டிஸ்டன்சும், முக்கவசமும் கேள்விக்குறியாகவே உள்ளது.  தொற்று குறித்து பெரும்பாலோர் கவலைப்படுவது இல்லை என்பது அவர்கள் முகக்கவசம் அணியாமல் தெனாவெட்டாக சுற்றுவதில் இருந்தே தெரிய வருகிறது.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள மார்க்கெட்டுகளுக்கும் மக்கள் படையெடுக்கத் தொடங்கி உள்ளனர் கடந்த சில மாதங்களாக காணாமல் போன சாலையோரக் கடைகள் மீண்டும் முளைத்து வருகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல ஏற்பட்டுள்ளது. மக்களிடையே சமூக இடைவெளி கேள்விக்குறியானது. அரசின் உத்தரவுகளும்  காற்றில் பறக்கவிடப்படுகிறது.

இதுபோன்ற நிலை தொடர்ந்தால், மீண்டும் தொற்று பாதிப்புக்குள்ளாகி அல்லல்பட வேண்டியது இருக்கும் என்பதை மக்கள் மறந்து விட்டதுபோல் தெரிகிறது.