தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்குநராக அறிமுகமான படம் ‘மாயவன்’. இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

ஆனால், இந்தப் படத்தின் இந்தி டப்பிங்கிற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ‘மாயவன்’ படத்தின் 2-ம் பாகமாக ‘மாயவன் ரீலோடட்’ படத்தை அறிவித்தார் சி.வி.குமார்.

தற்போது ‘மாயவன் ரீலோடட்’ படத்தின் நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளார் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று (மே 7) சந்தீப் கிஷனின் பிறந்த நாளாகும். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இந்தப் படம் உருவாகவுள்ளது.