ரஜினிக்கு வில்லனாகும் சுனில் ஷெட்டி….!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி , நயன்தாரா நடித்துவரும் படம் ‘தர்பார்’ . லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார்.

கடந்த ஏப்ரல் 10-ம் தேதி, இதன் படப்பிடிப்பு பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில் 2-ம் கட்ட படப்பிடிப்பு மே 29-ம் தேதி தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

இந்நிலையில், ரஜினிக்கு வில்லனாக சுனில் ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவரது மகனாக ப்ரதீக் பப்பார் நடிக்கவுள்ளார். சுனில் ஷெட்டி சம்பந்தப்பட்ட காட்சிகளை 2-ம் கட்ட படப்பிடிப்பில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது. ’12 பி’ படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சுனில் ஷெட்டி.

கார்ட்டூன் கேலரி