காஷ்மீர்

காஷ்மீர் இளைஞர் மனிதக்கேடயமாக கட்டப்பட்ட சம்பவம் ராணுவத் தளபதி பிபின் ராவத்தை ஜெனரல் டயருடன் ஒப்பிடுவது வருத்தத்துக்குரியது என்று கடற்படைத் தளபதி சுனில் லம்பா தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் தீவிரவாதிகளின் போராட்டங்களும் ராணுவ அத்துமீறல்களும் என்றும் முடியாத நிகழ்வுகளாகி வருகின்றன.

ராணுவத்தை சேர்ந்த மேஜர் லீதுல் கோகாய்.

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில்  நடந்த தேர்தலின் போது ஒரு ராணுவ ஜீப் ரோந்துக்காக சென்றது.

இளைஞர் ஒருவர் இந்த ஜீப்பில் லீதுல் கோகாயால் மனிதக் கேடயமாகக் கட்டப்பட்டார்.

இது வீடியோ செய்தியாக வெளி வந்து மீடியாக்களில் வைரலாகப் பரவியது.

கோகாய் மீது பல்வேறு விமரிசனங்கள் ஊடகங்களில் பரவின

இந்த நிலையில் மேஜர் லீதுல் கோகாய்க்கு, பல்வேறு எதிர்த் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு தலைமையேற்றதாக ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் பரிந்துரையின் பேரில் பாராட்டுப் பத்திரம் அளிக்கப்படுள்ளது.

அந்த இளைஞரை மனிதக் கேடயமாகக் கட்டிய செயல் ஏற்கனவே பலராலும் கடுமையாக விமரிசிக்கப் பட்டது

மேற்கு வங்கத்தை சேர்ந்த கல்வியாளர் பர்த்தா சட்டர்ஜி.

இவர், ராணுவத் தளபதி பிபின் ராவத்தைப் பற்றி ஒர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

அதில் ராவத்தை  ஜாலியன் வாலாபாக் படுகொலையை அரங்கேற்றிய ஜெனரல் டயருடன் ஒப்பிட்டு விமர்சித்திருந்தார்.

இதற்கு கடற்படை தளபதி சுனில் லன்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது மிகவும் வருந்தத்தக்க, அதே நேரத்தில் ஒரு வேண்டாத கருத்து என்றும், கூறியுள்ளார்.