அடல்ட் ஒன்லி திரைப்படங்கள் மூலம் அதிகம் பேசப்பட்டவர் சன்னி லியோன். இவருக்கும் டேனியல் வெபருக்கும் கடந்த 2009-ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது.

நிஷா கவுர் எனும் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் இத்தம்பதி வாடகைத் தாய் மூலம் ஆஷர், நோவா என்ற இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றனர்.

சன்னி லியோன் – வெபர் தம்பதி காதலர் தினம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளனர்.

அதில் வெபர் கூறுகையில், காதலர் தினத்தன்று ஒரு வேலையாக டாக்கா செல்கிறேன். காலை நேரத்தை டாக்காவில் கழித்தாலும் மாலை வீடு திரும்பி என் அழகான மனைவியை இரவு விருந்துக்கு அழைத்துச் செல்வேன். அதற்காக அவரிடம் நான் ஒப்புதலும் பெற்று விட்டேன்” என்றார்.

சன்னி லியோன் கூறுகையில், எனது குழந்தைகளான நிஷா, ஆஷர், நோவா ஆகியோருடன் தான் காதலர் தினத்தன்று எனது நேரத்தைச் செலவழிக்கப் போகிறேன். எனது கணவருடன் இரவு உணவு சாப்பிடுவேன்” என்றார்.

மேலும் காதலின் அர்த்தம் என்ன என்ற கேள்விக்கு சன்னி லியோன், அர்த்தம் மிக எளிமையானது. அழகான மனைவி, மகிழ்ச்சியான வாழ்க்கை என்றார்.

டேனியல் வெபர், “சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு சமரசம் முக்கியம்” என்றார்.