‘கரன்ஜித் கவுர்’: சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு தமிழிலும் வெளியாகிறது..

மும்பை:

ன்னி லியோனின் ‘கரன்ஜித் கவுர்’ வாழ்க்கை வரலாறு குறித்த இணையதள தொடர் தமிழில் வெளியாக இருப்பதாக சன்னி லியோன் தெரிவித்து உள்ளது.

பிரபல கவர்ச்சி நடிகையான சன்னிலியோனின் வாழ்க்கை வரலாறு குறித்த இணையதள தொடருக்கு ‘கரன்ஜித் கவுர்’ என்று பெயரிட்டதற்கு சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில்,  சன்னிலியோனின் வாழ்க்கை வரலாற்று படமான  ‘தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்’ தமிழிலும் வெளியாக இருப்பதாக நடிகை சன்னி லியோன் தமிழில் டுவிட் செய்து தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவழியை சேர்ந்தவரும், ஆபாச பட நடிகையுமான சன்னிலியோன் கனடா நாட்டை சேர்ந்தவர். இவர் இந்திய மொழிபடங்களில்  நடித்து வருகிறார். பாலிவுட்டில் பிரபலமாக இருந்த வருகிறார்.

அவர் தனது வாழ்க்கை வரலாறு குறித்து தொடர் தயாரித்து, அதை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். இது கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றினை  ஜீ குழுமத்தின் சேனலில், கடந்த ஜூலை 16 ஆம் தேதி ‘தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்’-னின் வாழ்க்கை வரலாற்று தொடர் இந்தியில் வெளியாகி வருகிறது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், இந்த தொடரை தமிழிலும் வெளியிட ஜீ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, நடிகை சன்னி லியோன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், “அனைவருக்கும் வனக்கம்..தமிழ் உட்பட பல மொழிகளில் என் கதை சொல்லப்படு கிறது என்று நான் மிகவும் ஆவலாக உள்ளேன். நான் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இது தமிழக ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.