ஆஸ்கர் விழாவில் ஜொலித்த மும்பை குடிசை குழந்தை

மும்பை:
‘லயன்’ என்ற ஹாலிவுட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மும்பை குடிசைப் பகுதியை சேர்ந்த சன்னி பவாருக்கு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பலத்த வரவேற்பு கிடைத்தது.

மும்பை விமானநிலையம் அருகே மேற்கு புறநகர் பகுதியில் உள்ள கலினா என்ற குடிசை பகுதியை சேர்ந்தவர் திலிப் பவார். ஓய்வுபெற்ற அரசு அலுவலக துப்புரவு தொழிலாளி. இவரது மனைவி வாசு. இல்லத்தரசி. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இதில் மூத்த மகன் சன்ன பவார் ஏர் இந்தியா மாதிரிப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். 7 வயதாகும் சன்னி பவாருக்கு ஹாலிவுட்டில் ஜொலிக்கும் அளவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று யாரும் எதிர்பார்க்காத ஒன்று. ஹாலிவுட் படமான ‘லயன்’ என்ற சரூ பிரியர்லியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் இளம் வயது சரூ பிரியர்லியின் கதாபாத்திரத்திற்கு சன்னி பவார் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியா முழுவதும் 2 ஆயிரம் பள்ளி குழந்தைகள் மத்தியில் நடந்த தேர்வில் சன்னி பவார் தேர்வு செய்யப்பட்டு அதில் நடித்தார். இந்த படம் மெகா ஹிட்டானது. சன்னி பவாரின் கதாபாத்திர நடிப்பு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. சரூ பிரியர்லியின் பெரிய வயது கதாபாத்திரத்தில் தேவ் படேல் நடித்திருந்தார்.

சன்னிக்கு ஆங்கிலம் சரியாக பேச வரவில்லை. அதனால் படப்பிடிப்பின் போது இயக்குனர் கார்த் டேவிஸ் கை செய்கை மூலம் புரிய வைத்து நடிக்க வைத்தார். இதற்கு இயக்குனர் பெரிய சிரத்தை எடுத்துக் கொண்டார். இந்தியாவில் படமாக்கப்பட்ட காட்சிகளின் போது ஹிந்தியில் பேசியதான் சன்னிக்கு நடிப்பது எளிதாக இருந்தது.

89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் லயன் படத்துக்கு விருது வழங்கப்பட்டது. இதில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சன்ன பவாருக்கும விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜிம்மி கிமெல் சன்னி உட்கார்ந்திருந்த இடத்திற்கு சென்று அவரை தூக்கி கொண்டு வந்து பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்தார்.

பார்வையாளர்களின் பலத்த கரகோஷத்துடன், ஹாலிவுட் நடிகர், நடிகைகள் மத்தியில் சன்னி பவாருக்கு பலத்த வரவேற்பு இரு ந்தது. இந்த விருது வழங்கும் விழாவில் சன்னி பவார் ஜொலித்தார்.