டில்லி:

ர்நாடக மாநிலத்தில் நிலவும் அரசியல் பரபரப்புக்கிடையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. 17எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரியே என்று அதிரடியாக அறிவித்து உள்ளது. இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே வேளையில், அங்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிடலாம் என்றும் தெரிவித்து உள்ளது.

குமாரசாமி அரசுக்கு எதிராக காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி, ராஜினாமா கடிதம் கொடுத்ததைத் தொடர்ந்து அங்கு குமாரசாமி ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அதிருப்தி எம்எல்ஏக்களை கட்சிச் கொறடாக்களின் கடிதத்தின்பேரில், சபாநாயகர் ரமேஷ்குமார் அவர்களை தகுதி நீக்கம் செய்து அறிவித்தார்.

இதை எதிர்த்து, தகுதி நீக்கம் செய்யப்பட் எம்எல்ஏக்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் பரபரப்பான வாதங்கள் நடைபெற்றன. சபாநாயகர் முடிவில் தலையிட நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை வாதிடப்பட்டது.

ஆனால், அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, சட்டமன்ற  பேரவை தலைவரின் முடிவு நீதிமன்றத்துக்கு கட்டுப்பட்டது என வாதிட்டார்.

பரபரப்பாக நடைபெற்று வந்த இந்த வழக்கை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.  கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி இறுதி விசாரணை நடைபெற்றதுடன் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது சரியே என்று உத்தர விட்டு இருப்பதுடன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிடலாம் என்றும் தெரிவித்து உள்ளது.

17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமாரின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

தீர்ப்பில் நீதியரசர் ஜே ரமணா கூறியிருப்பதாவது,  மனுதாரர் நீதிமன்றத்திற்கு வந்த விதத்தை நாங்கள் பாராட்டவில்லை என்றும், இந்த விவகாரத்தின்போது, உச்சநீதி மன்றன் அமர்வு மூலம் இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு  நிறைவேற்றப்பட்டன. இறுதி நாளான  26.09.2019 அன்று இந்த விவகாரத்தில்  நீண்ட வாதங்களை கேட்டோம். அந்த விஷயத்தைக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை.

தகுதி நீக்கத்திற்கு சவால் விடும் ஒரு கட்சி முதலில் ஐகோர்ட்டை அணுக வேண்டும். சர்ச்சை இங்கு வந்தால் இந்த நீதிமன்றம் ஐகோர்ட் தீர்ப்பின் பலனைப் பெறும். இந்த நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இருந்தாலும். தகுதி நீக்கத்தை நாங்கள் தீர்மானிப்பதால், ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை. எனவே தகுதிநீக்கத்திற்கு ராஜினாமாவுடன் எந்த தொடர்பும் இல்லை என்பதில் சந்தேகமில்லை. ராஜினாமா  சட்டமன்ற சபாநாயகரின் தகுதி நீக்கம் செய்யும் அதிகாரத்தை பறிக்காது.

அரசியலமைப்பின் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் சபாநாயகருக்கு  இந்த அதிகாரம் உள்ளது என்பது தெளிவாகிறது. சட்டத்தின் விதி அதே. இதில் குழப்பமடையக்கூடாது.

சபாநாயகர் உத்தரவை உச்சநீதி மன்றம் ஆதரிக்கிறது. சபாநாயகர் ஒரு அரை நீதித்துறை அதிகாரம் பெற்றவர்.  இது சட்டத்தின் விதி அதில் குழப்பமடையக்கூடாது என்று தெரிவித்து உள்ளார்.

அத்துடன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்று அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், அவர்களால் மாநில அமைச்சர்களாக  பதவி ஏற்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.