இந்தியில் ரீமேக் ஆகும் விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’….!

சமீபத்தில் ரிலீஸான விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படம், இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா, மிஷ்கின், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு எவ்வளவு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது போலவே, ஆதரவுக் குரல்களும் பலமாக ஒலித்தன. இந்நிலையில் இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளார் தியாகராஜன் குமாரராஜா.

இந்தி ரீமேக்குக்கான ஆரம்ப வேலைகள் தொடங்கிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அனுராக் கஷ்யப், இந்தப் படத்தைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.