சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘சைரா நரசிம்மா ரெட்டி’. படத்தின் வெளியீட்டு உரிமையினை சூப்பர் குட் பிலிம்ஸ் கைப்பற்றியள்ளத.

ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது இப்படம் .

பல வெற்றிகளை தந்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் ‘சைரா’ படத்தின் தமிழக உரிமையை பெற்றிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளிலும் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Amazon Prime Video 40 கோடி ரூபாய்க்கு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியானது.

அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் திரை வெளியீட்டிற்கு 60 நாள் பின்னர் டிஜிட்டல் பிலாட்பார்மில் இத்திரைப்படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.