சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 டைட்டில் வின்னரான ரித்திக்…!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில், ஹிருத்திக் டைட்டில் வெற்றி பெற்றதோடு, ரூ.50 லட்சம் வீடும் பரிசாக பெற்றுள்ளார்.

சிங்கர் ஜூனியர் 6 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று சென்னை நேரு மைதானத்தில் நடந்தது.

இறுதிப் போட்டியில் இடம்பெற்ற பூவையார், சின்மயி, அனுஷ்யா, அஹானா, சூர்யா மற்றும் ஹிருத்திக் ஆகிய 6 போட்டியாளர்களில் ரித்திக் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீடும் பரிசாக வழங்கப்பட்டது.

சங்கர் மகாதேவன், சித்ரா, எஸ்பிபி சரண் மற்றும் பாடகி கல்பனா ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.