சென்னை:

ன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முதல் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் 70 ரன்னில் பெங்களூர அணியை சுருட்டி விரட்டியடித்தது.

இன்றைய போட்டியில் மேன் ஆப் தி மேட்ச் அவார்டு (சூப்பர் சிங்கம் ஆப் தி மேட்ச்)  ஹர்பஜனுக்கு வழங்கப்பட்டது.

சென்னை அணியின்  சுழற்பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சில் பெங்களூர் வீரர்கள் திக்குமுக்காடிய நிலையில், விக்கெட்டை இழந்து ஓடினர்.

ஆட்டத்தின்போது, கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்து, சரியான முறையில் அணியி வழிநடத்திச் சென்றார்.

பெங்களூரு அணியின்  தொடக்க ஆட்டக்காரர்களாக  விராட் கோலி மற்றும் பார்த்தீவ் பட்டேல் களமிறங்கினர்.

சென்னையில் அணியில் இரண்டாவது ஓவரை வீசிய ஹர்பஜன் சிங் அடுத்தடுத்து விக்கெட்களை அள்ளினார். இதன் காரணமாக மைதானத்தில் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் விசில் அடித்தும், ஆரவாரம் செய்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பஞ்சாப் சிங்கத்தின் சுழலுக்கு தாக்குபிடிக்க முடியாமல், கேப்டன் விராட் கோலி 6 ரன்னிலும்,, ஏபி டிவில்லியர்ஸ் 9 ரன்களிலும், மொயின் அலி 9 ரன்னில் வெளியேற்றப்பட்டனர். இதுவே ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற அடித்தளமாக அமைந்தது.

இதையடுத்து இன்றைய போட்டியில் சூப்பர் சிங்கம் ஆப் தி மேட்ச் (மேன் ஆப் தி மேட்ச் ) கோப்பை  ஹர்பஜனுக்கு வழங்கப்பட்டது.

அதுபோல இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா 21 பந்துக்கு 19 ரன்கள் எடுத்த நிலையில், ஐபிஎல் தொடரில் 5ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.