பிரபல நடிகையான எமி ஜாக்சன் டிவி சிரியலில் நடிக்க இருக்கிறார். இதை உறுதி செய்து தனது டுவிட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார்.

ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான வர் எமி ஜாக்சன். இவருக்கு தற்போது போதுமான படங்கள் இல்லை. இந்நிலையில் அவர் சின்னத்திரையில் நடிக்க வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த சி டபிள்யு என்ற தொலைக்காட்சியில் வெளி வர இருக்கும்  சூப்பர் கேர்ள்  என்ற தொடரில் சான்டர்ன் கேர்ள் என்ற  பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சீரியல் வரும் அக்டோபர் 9ஆம் தேதி முதல் சி டபிள்யு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவ தாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஹாலிவுட்டில் சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் பிரபல இயக்குநர்களும் முன்னணி நடிகர்களும் டிவி சீரியல்களில் நடிக்கத் தொடங்கியுள்ளனர்.

தற்போது இந்த பட்டியலில் எமியும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.