சூப்ப‌ர்ஹிட் திரைப் ப‌ட‌ங்க‌ள் இல‌வ‌ச‌மாக‌ பார்க்க‌லாம். தயாரிப்பாளர் அறிவிப்பு..

ப‌ல‌ வெற்றி ப‌ட‌ங்க‌ளை கொடுத்த‌ தயாரிப்பாள‌ர் ஜேஎஸ்கே ஆடியோ ம‌ற்றும் ஜேஎஸ்கே பிரைம் யூடியூப் சேனல் (Jsk Prime YouTube Channel) வெற்றி யை தொட‌ர்ந்து அவரின் அடுத்த‌ முய‌ற்சி யாக‌ இம்மாத‌ம் ஆகஸ்ட் 28ம் தேதி முத‌ல் ஜேஎஸ்கே பிரைம் மீடியா (JSK PRIME MEDIA) டிஜிட்ட‌ல் த‌ள‌ம் அறிமுக‌மாக‌ வுள்ளது.
இதில் ம‌க்க‌ள் திரும்ப‌ திரும்ப‌ விரும்பி பார்க்க‌ நினைக்கும் சூப்ப‌ர்ஹிட் திரைப் ப‌ட‌ங்க‌ள் இல‌வ‌ச‌மாக‌ பார்க்க‌லாம். அதும‌ட்டுமில்லாது புத்த‌ம் புதிய‌ திரைப் ப‌ட‌ங்க‌ளும் வெளியாக‌வுள்ள‌ன‌.அப்ப‌டி வெளியாகும் திரைப்ப‌ட‌ங்க‌ளுக்கு ம‌ட்டும் க‌ட்ட‌ண‌ம் செலுத்த‌ வேண்டும். அதில் முத‌லாவ‌தாக ஜேஎஸ்கே பிலிம்கார்ப்பரேஷன் தயாரிப்பில் அறிமுக‌ இய‌க்குனர் சி. வேல்ம‌தி இய‌க்க‌த்தில் அண்டாவ காணோம் திரைப்ப‌ட‌ம் வெளியாக‌ உள்ள‌து.
இத்திரைப்ப‌ட‌ம் முழுக்க‌ முழுக்க‌ கிராம‌த்தை மைய‌மாக‌க்கொண்டு ஒரே நாளில் ந‌ட‌க்கும் ந‌கைச்சுவை க‌லந்த‌ குடும்ப திரைப்ப‌டமாகும். ப‌ட‌த்தில் ஷ்ரேயாரெட்டி க‌தாநாய‌கியாக‌ ந‌டித்துள் ளார். அவ‌ர்க‌ளின் ந‌டிப்பு எப்ப‌வும்போல‌ ர‌சிக‌ர்க‌ளை ஈர்க்கும் என்ப‌தில் சிறிதும் ச‌ந்தேக‌ம் இல்லை.இதில் நடித்த 100 கதாபாத்திர‌மும் க‌தையில் அண்டாவோடு சேர்ந்து நடித்தார்கள் என்பதைவிட வாழ்ந்தார்க‌ள் என்ப‌தே உண்மை.ஓர் அண்டாவை மைய‌மாக ‌வைத்து காதல், பாசம், கோபம், ந‌கைச்சுவை, பிரிவு, இழப்பு, ஜாதி, ம‌த‌ம், இப்படி ப‌ல்வேறு
உணர்வுகளை அண்டாவ காணோம் ஒரே திரைப்ப‌ட‌த்தில் காண‌லாம்.
அண்டாவ காணோம் திரைப்ப‌ட‌ம் JSK PRIME MEDIA Digital த‌ள‌த்தில் வ‌ரும் ஆகஸ்ட் 28ம் தேதி உல‌க‌மெங்கும் வெளி யாக‌ உள்ள‌து.இப்ப‌ட‌த்தை தொட‌ர்ந்து மம்மி சேச் மீ, வா டீல் போன்ற‌ புதிய‌ திரைப்ப‌ட‌ங்க‌ளும் வெளியாக‌வுள்ள‌ன‌.

You may have missed