சானிடைசர் பதுக்கலை தடுக்க டென்மார்க் சூப்பர் மார்க்கெட் செய்த அசத்தல் நடவடிக்கை…

கொரோனா தொற்று காரணமாக, மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் டென்மார்க் நாட்டில் சூப்பர் மார்க்கெட் ஒன்று அசத்தலான நடவடிக்கை எடுத்துள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

உலக நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும், முக்கியமாக கைகளை கழுவ பயன்படும் சானிடைசர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதை தேவைக்கு அதிகமாக  வாங்கி பொதுமக்கள் பதுக்கி வருகின்றனர்..

மேலும், பொதுமக்கள் அச்சம்  காரணமாக மேலும் சில வாரங்களுக்கு தேவையானபொருட்களை வாங்க சூப்பர் மார்க்கெட்டை முற்றுகையிடுகின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது.

இதை தடுக்கும் வகையில், டென்மார்க்கில் உள்ள சூப்பர் மார்க்கெட் தந்திரத்தைப் பயன்படுத்துகிறது.  மக்களுக்கு முக்கிய தேவையான சானிட்டைசரை காட்சிப்படுத்தி, முக்கிய பாதுகாப்பு தொடர்பான  அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அன்புள்ள வாடிக்கையாளர்கள்:

வணிகத்தை தொடர்ந்து நடத்துவதற்கு எங்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு உள்ளது, மேலும் அனைவரின் உதவி மற்றும் புரிதலுடன் மட்டுமே நாங்கள் அதைச் செய்ய முடியும். நான் பின்வரும் வழியில் உதவ முடியும்:

எல்லா வாடிக்கையாளர்களுக்கும் ஒருவருக்கொருவர் மற்றும் எங்கள் சக ஊழியர்களுக்கு இடையிலான தூரத்தை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நுழைவாயிலில் கைகளைத் தூவி (சுத்தப்படுத்தலாம் அல்லது கழுவலாம்) கையுறைகளைப் பயன்படுத்துங்கள்.

நீங்கள் ஒரு குடும்பமாக இருந்தால், தயவுசெய்து ஒருவரை மட்டுமே வாங்கினால் வாங்க அனுமதிக்கவும்.

ஒரு நேரத்தில் கடையில் எத்தனை வாடிக்கையாளர்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்பதைக் கட்டுப்படுத்தும் நேரங்கள் இருக்கலாம்.

பேஸ்புக்கில் எந்தவொரு இயக்க மாற்றங்களையும் நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம்.

உங்கள் புரிதலுக்கு நன்றி.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.